1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (15:32 IST)

வில்லனாக நடிக்கும் பாடகர் அந்தோணிதாசன்.. டைட்டில் அறிவிப்பு..!

பிரபல பாடகர் அந்தோணி தாசன் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழ் திரை உலகின் முன்னணி பாடகர்களில் ஒருவர் அந்தோணி தாசன் என்பதும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார் என்பதும் தெரிந்ததே. 
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அந்தோணி தாசன் தற்போது ’தல போச்சே’  என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
 
இந்த படத்தின் வில்லன் கேரக்டர் தன்னை மிகவும் கவர்ந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே அவர் இடி முழக்கம், வைரி உள்பட சில படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva