1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated: வியாழன், 25 மே 2023 (19:59 IST)

60 வயதில் இரண்டாம் திருமணம் செய்த கில்லி வில்லன் - கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்!

வில்லன் நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர் ஆஷிஷ் வித்யார்த்தி. தில் படத்தில் வெட்டு சங்கராக நடித்து பிரபலமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் 1995 ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார்.
 
குறிப்பாக விஜய்யின் கில்லி படத்தில் அவரது அப்பாவாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அதன் பிறகு பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான அனேகன் படத்தில் நடித்தார். 
Gallery
 
அதன் பின் தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இந்தி மற்றும் பெங்காலி ஆகிய படங்களில் நடித்து வந்தார். இவர் ராசோசி பரூவா என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். இருக்கு ஒரு மகனும் இருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது 60 வயதாகும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்னை இன்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ரூபாலி பருவா ஒரு ஃபேஷன் ஸ்டோர் நடத்தி வருகிறார். ஆஷிஷ் வித்யார்த்தி அடிக்கடி கொல்கத்தாவுக்கு செல்வதை அவரது vlogகளில் காட்டி வந்தார். தற்போது இந்த திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பலர் அவரை மோசமாக விமர்சித்து ட்ரோல் செய்துள்ளனர்.