செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (14:48 IST)

பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வராதீங்க.. நானே உங்கள தேடி வரேன்! – சிம்பு அறிவிப்பு!

நடிகர் சிம்பு நடித்து வெளியான ஈஸ்வரன் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது ஒரு அறிவிப்பை சிம்பு வெளியிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக சிம்பு நடித்து படம் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஈஸ்வரன் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதை தொடரந்து பத்து தல, மாநாடு உள்ளிட்ட படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சிம்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈஸ்வரன் படத்திற்கு பெரும் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர் ரசிகர்களை தனது குடும்பமாக பாவிப்பதாக கூறியுள்ளார். மேலும் எதிர்வரும் தனது பிறந்தநாள் அன்று தான் ஊரில் இல்லாமல் வேலை காரணமாக வெளியூர் செல்வதாக கூறியுள்ள அவர் தனது ரசிகர்கள் தன்னை சந்திக்க வீட்டிற்கு வந்து ஏமாற்றமடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கூடிய விரைவில் ரசிகர்களை சந்திக்க சிறப்பு ஏற்பாடு செய்வதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.