1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (11:03 IST)

3 மணி நேரம் முன்னாடி லீக் ஆன மாஸ்டர்! – அமேசானுக்கே அதிர்ச்சி!

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று அமேசானில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திருட்டுதனமாக இணையதளங்களில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் மாஸ்டர். பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்த படம் இரண்டு வாரங்கள் ஓடி முடித்துள்ள நிலையில் இன்று அமேசானில் வெளியாவதாக அறிவிப்பு வெளியானது.

நள்ளிரவு 12 மணி அளவில் அமேசானில் படம் வெளியானது. இந்நிலையில் அமேசானில் வெளியாவதற்கு சில மணி நேரங்கள் முன்னமே தமிழ்ராக்கர்ஸ் போன்ற முறைகேடான இணையதளங்களில் மாஸ்டர் வெளியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்ற நாடுகளின் நேரக்கணக்கின்படி அங்கு முன்னதாக வெளியானதும் அது திருடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.