துக்க வீட்டிற்கு சென்ற சிம்புவை வளைத்து பிடித்து செல்ஃபி எடுத்த ரசிகர்கள் - வைரல் வீடியோ!

papiksha| Last Updated: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (15:52 IST)

நடிகர் சிம்பு கூட்ட நெரிசலில் சிக்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 'மாநாடு' திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து சிம்புவின் தாயார் கொடுத்த உறுதி மொழியை ஏற்று 'மாநாடு' படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். பின்னர் படப்பிடிப்பிற்கான வேலைகள் மும்முரமாக துவங்கிய நிலையில் அண்மையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அப்துல் காலிக் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒன்று நடிகர் சிம்பு திருவெற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கேபிபி சாமி அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது
அப்போது சிம்புவை பார்த்த மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்தது. சில சிம்பு ரசிகர்கள் துக்க வீடு என்று கூட பார்க்க்காமல் செல்பி எடுக்க முந்தியடித்தனர். ஆனால் சிம்பு நிற்காமல் வேக வேகமாக அங்கிருந்து கிளம்பி காரில் ஏறி சென்றார். இந்த
வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :