2.0 வில் தெறிக்க விட்ட விஸ்வாசம் - குதூகலத்தில் குதித்த தல ரசிகர்கள்!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ் சினிமா ரசிகர்கள் தாண்டி இந்திய சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்த 2.0 இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில் 2.0 கண்டிப்பாக இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் சாதனை குவிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களே தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 2.0 படத்தை திரையிட்ட திரையரங்குகளில் இடை இடையே மற்ற படங்களின் டீசர், ட்ரைலரும் ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றது. அதில் விஸ்வாசம் மோஷன் போஸ்டரும் திரையிட்டுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத தல ரசிகர்கள் தியேட்டருக்குள் ஆட்டம் போட்டுள்ளனர்.