1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (15:32 IST)

கன்னட படத்தின் வெற்றிக்காக கேக் அனுப்பிய நடிகர் சிம்பு!

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

மொழி தாண்டியும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சப்டைட்டில் வசதியோடு இந்த படம் ஓடி வருகிறது. பொன்னியின் செல்வனுக்கு பிறகு ரசிகர்கள் ஆவலாகப் பார்க்கும் படமாக காந்தாரா அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகர் சிம்பு படக்குழுவினருக்கு கேக் ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Vinoth