திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (07:07 IST)

கட்டம் கட்டி கலக்கும் சிம்புவின் அடுத்த படம்.. இயக்குனரை அறிவித்த ஏஜிஎஸ்..!

நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு   அழகிய போஸ்டருடன் வெளியாகியுள்ளதை அடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
 
சிம்பு நடிக்கும் இந்த புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இயக்குநராக அஸ்வத் மாரிமுத்து பணியாற்றுவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே "ஓ மை கடவுளே" படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் "டிராகன்" என்ற படத்தை இயக்கி வருகிறார், அந்த படம் முடிந்த பிறகு சிம்புவின் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏஜிஎஸ் நிறுவனத்தின் 27-வது படமாக உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
சிம்பு இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில், “ஏஜிஎஸ் நிறுவனத்துடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது நண்பர், திறமையான இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும், “கட்டம் கட்டி கலக்குறோம்” என்ற கேப்ஷனை வெளியிட்டுள்ளார். சிம்புவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
 
Edited by Siva