திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (23:34 IST)

டி. ராஜேந்தர் சங்கத்துக்காக... சிம்பு எடுத்த அதிரடி முடிவு...

சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றார். டி ஆர் ராஜேந்தர் தோல்வி அடைந்தார்.

ஆனால் டி.ஆர் புதிய தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கு தமிழ்நாடு திரைப்படத்  தயாரிப்பாளர் சங்கம் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

இச்சங்கத்தை பதிவு செய்வதற்க்காக விண்ணபித்த ஆதாரமும் வெளியாகியுள்ளது.  5 ஆம் தேதி சங்கம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

இதில் ஜே.சுதிஸ்,சிங்கார வடிவேலன் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக உள்ளனர்.

மேலும் இந்தச் சங்கத்தின் நலனுக்கான சம்பளம் பெறாமல் சிம்பு ஒரு படம் நடித்துக்கொடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
 
 சிம்பு நடிப்பில் விரைவில் ஈஸ்வரன் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.