1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 5 மார்ச் 2023 (08:15 IST)

சிம்புவின் பத்து தல படத்தின் தொலைக்காட்சி உரிமை.. கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது. இப்போது சில பல மாற்றங்களோடு ‘பத்து தல’ என்ற பெயரோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் சிம்புவின் வேடத்தை ஒரிஜினல் வெர்ஷனை விட நீளப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.