வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 4 மார்ச் 2023 (15:13 IST)

சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்கிறாரா கமல்ஹாசன்? லேட்டஸ்ட் அப்டேட்!

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேல நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. பத்து தல படம் சிம்புவின் 48 ஆவது படம் (குழந்தை நட்சத்திரமாக நடித்தது உட்பட). இதையடுத்து சிம்பு அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சிம்புவை வைத்து படம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தவரும் தயாரிப்பாளர்களோடு சம்பளப் பிரச்சனை காரணமாக இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என சொலல்ப்படுகிறது.

இந்நிலையில் இப்போது சிம்பு நடிக்கும் ஒரு படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தேசிங் பெரியசாமி இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தேசிங் பெரியசாமி இவ்வளவு நாட்களாக ரஜினிக்காக திரைக்கதை எழுதி வந்ததாக சொல்லப்பட்டது.