செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (07:34 IST)

சிம்புவிடம் சந்தானத்தை அறிமுகப்படுத்தியதே இவர்தானா?.. நன்றியை மறக்காமல் செய்யும் உதவி!

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த குலுகுலு திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அவர் நடிப்பில் ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் சந்தானம் ஆரம்ப கால படங்களில் இணைந்து நடித்த வல்லவன் படத்தில் காதல் சுகுமாரோடு இணைந்து நடித்திருந்தார். அந்த காதல் சுகுமார்தான், சந்தானத்தை சிம்புவிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தி வைத்தாராம். இந்நிலையில் இப்போது சுகுமார் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படம் பற்றி காதல் சுகுமார், தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அப்டேட்டில், “ஆறு மாதங்களுக்கு முன் கதையின் ஒன்லைன் சொன்னதற்கு "சூப்பர் மச்சி" ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு சொல்லு" என்று உற்சாகமூட்டினான். சில நாட்களுக்கு முன்னதாக ரெடி மச்சி என்றதும் "வடக்குப் பட்டு ராமசாமி" படப்பிடிப்பில் இருக்கிறேன் பொள்ளாச்சிக்கு வா மச்சி என வரச்சொன்னதும் சென்றேன்.

"ஒன் அவர்ல சொல்லு மச்சி"  என கதை கேட்க நான் ஒரு மணி நேரத்தில் சொல்லி முடித்து விட்டேன். படப்பிடிப்புக்கு இடையே கதை கேட்டாலும் கேரவேனில் இரண்டு மணி நேரம் கதை பற்றி  பேசியது அவரது ஈடுபாட்டைக் காட்டியது.  "நிச்சயமா நாம பண்றோம் என்றவன். எனது இணை தயாரிப்பாளரிடம் ...

"கதை வேற லெவல்ல இருக்கு.. அதுக்காக சொல்லல... இன்டஸ்டிரில நான் இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கு காரணம் சுகுமார் தான். அவன் மட்டும் சிம்புகிட்ட என்னை இன்ட்ரோ பண்ணலன்னா இந்த இடத்துக்கு நான் வந்திருக்க மாட்டேன். சினிமால மூணு பேரைத்தான் நான் மச்சி ன்னு கூப்டுவேன். ஒண்ணு ஆரியா, அடுத்து ஸ்ரீநாத் , அப்புறம் சுகுமார்.. நாங்க 20 வருசமா பழகுனாலும் உதவி கேட்டோ, வாய்ப்பு கேட்டோ என்கிட்ட இதுவரை அவன் வந்ததே இல்ல... உன்னை வச்சி படம் பண்ணனும்னு கேட்ருந்தா நான் எப்பவோ பண்ணிருப்பேன்.ஸ்ரீநாத் அப்பிடி கேட்டப்போ ராஜமௌலி சாரோட படத்தை தமிழ் ரைட்ஸ் வாங்கி அவனுக்கு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை குடுத்தேன்.

"இப்போ நான் இவனுக்கு பண்றது என் கடமை, அவன் இன்னும் நல்லா வரணும்..
அவன் நினைச்ச மாதிரி படம் வந்தா நாம எல்லாருமே நல்லாருப்போம்" என சொன்னதும் நான் நெகிழ்ச்சியில் கலங்கிப் போனேன்.!!  நட்பிற்கும் உண்டோ உன்னைப்போல் சந்தானம்.. நீ என்றும் நீ பேசியதைப் போல் "நண்பேன்டா"!!! #விரைவில் இறை நல்லாசியுடனும் உங்கள் ஆதரவுடனும் அதிகாரப்பூர்வ அறிவுப்புகளோடு..! ” என பதிவு செய்துள்ளார்.