திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (19:47 IST)

சிம்பு படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்!

சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இதையடுத்து சிம்பு நடிக்கும் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தி இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை தற்போது பிரபல நிறுவனமான அமேசான் ப்ரைம் தளம்  வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் சிம்பு ஒரு கௌரவ வேடத்தில்தான் நடிக்கிறார் என்பதால் பெரிய தொகை கொடுத்து வாங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.