1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (10:58 IST)

டிவிட்டர், இன்ஸ்டா, யூட்யூப்.. ஆல்ரவுண்டர் ஆன சிம்பு!!

நடிகர் சிலம்பரசன் சமூக வலைதளங்களில் தனது பெயரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார். 

 
நடிகர் சிம்பு கடந்த 2015 ஆம் ஆண்டு திடீரென டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் அந்த டுவிட்டர் பக்கம் தனது ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அவர்கள் அந்த பக்கத்தை வழி நடத்துவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். மீண்டும் தேவைப்பட்டால் சமூக வலைத்தளத்திற்கு வருவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்நிலையில் தற்போது 5 ஆண்டுகள் கழித்து திடீரென மீண்டும் டுவிட்டர் பக்கத்தில் என்ட்ரி ஆகியுள்ளார். நடிகர் சிலம்பரசன் சமூக வலைதளங்களில் @SilambarasanTR_ என்ற பெயரில் ட்விட்டர், யூட்யூப், இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.