1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (19:01 IST)

சிம்புவின் ‘பத்து தல’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Pathu thala
சிம்பு நடித்த பத்து தல என்ற திரைப்படம் நேற்று வெளியாகிய நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. சிம்பு ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினாலும் நடுநிலை ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் ரசிக்கவில்லை என்பது விமர்சனங்களில் இருந்து தெரிய வருகிறது. 
 
இருப்பினும் இந்த படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் செய்துள்ளது. நேற்று வேலை நாளான வியாழக்கிழமை மற்றும் அதிகாலை காட்சிகள் இல்லாமலேயே இந்த படம் முதல் நாளில் ரூபாய் 12.3 கோடி வசூல் செய்துள்ளது. 
 
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள நிலையில் சிம்பு ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட நான்கு நாட்களில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
 
Edited by Siva