1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 28 நவம்பர் 2021 (19:04 IST)

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ‘மாநாடு’ வசூல்: சுரேஷ் காமாட்சி டுவிட்!

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரிலீசான நிலையில் இந்த படத்தின் முதல் இரண்டு நாட்கள் வசூல் ரூபாய் 14 கோடி என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் முதல் நாளுகு இணையாக மூன்றாம் நாளும் வசூல் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ‘மாநாடு’ படத்தின் 3 நாள் வசூல் 22 கோடி என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
முதல் நாள் 8 கோடியும் இரண்டாவது நாள் 6 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது நாளைவிட மூன்றாவது நாளில் அதிகமாக 2 கோடி வசூல் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
விரைவில் இந்த படம் 100 கோடி வசூலை எட்டும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது