1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (12:59 IST)

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’: ப்ரியா பவானிசங்கரின் கேரக்டர் அறிவிப்பு!

Priya
தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் கேரக்டர்கள் அறிமுகம் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். குறிப்பாக இந்த படத்தில் நாயகிகளில் ஒருவரான ராஷிகண்ணாவின் கேரக்டர் அனுஷா என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவர் தனுஷின் பள்ளி தோழியாக இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அடுத்ததாக பிரியா பவானி சங்கரின் கேரக்டர் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சற்றுமுன் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் ரஞ்சனி என்ற கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு கிராமத்து தென்றல் கேரக்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.