ஒரே படத்தில் இணையும் சிம்பு-கவுதம் கார்த்திக்: படப்பிடிப்பு தொடங்கியது

Last Modified சனி, 15 ஜூன் 2019 (19:04 IST)
கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களான சிம்புவும் கவுதம் கார்த்திக்கும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக கடந்த மாதம் செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 
 
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான சிவராஜ்குமாரின் 'முஃப்தி' என்ற அதிரடி ஆக்சன் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சிம்பு கேங்க்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கவுள்ளனர். சிம்பு ஏற்கனவே 'செக்க சிவந்த வானம்' படத்தில் கேங்க்ஸ்டராக நடித்திருந்தாலும் கவுதம் கார்த்திக் முதல்முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
'முஃப்தி' படத்தை கன்னடத்தில் இயக்கிய நார்தன் என்ற இயக்குனர் இயக்கும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை மதன் கார்க்கி எழுதவுள்ளார். இந்த படம் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோக்ரீன் தயாரிக்கும் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பில் 25 நாட்கள் கலந்து கொள்ளும் சிம்பு, இதனையடுத்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியா செல்லவுள்ளதாக கூறப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :