ஜி.வி.பிரகாஷ் – சித்தார்த் படத்துக்கு இசையமைப்பாளர் யார்னு தெரியுமா?
ஜி.வி.பிரகாஷ் – சித்தார்த் இணையும் படத்துக்கு இசை அமைப்பது யார் என்ற விவரம் கிடைத்துள்ளது.
‘பிச்சக்காரன்’ படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து, சசி இயக்கும் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் – சித்தார்த் இருவரும் ஹீரோவாக நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ‘ரெட்ட கொம்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி. மற்றும் சித்தார்த் இருவருமே ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்ததால், இந்தப் படம் ஜல்லிக்கட்டு பற்றியதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
விஜய்யின் ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்துவரும் தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சித்து குமார் என்ற புதியவர் இசை அமைப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.