திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (11:50 IST)

டேய் சாவடிச்சுடுவேன்.. ஓடிடு! – கமெண்ட் செய்த ரசிகரை விளாசிய சித்தார்த்!

மறைந்த பாலிவுட் நடிகர் திலீப்குமார் குறித்த சித்தார்த்தின் ட்வீட்டை கலாய்த்த ரசிகரை சித்தார்த் திட்டிய ட்வீட் வைரலாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் புகழ்பெற்ற நடிகரான த்லீப்குமார் இன்று உடல்நல குறைவால் காலமானார். அவரது இரங்கலுக்கு இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடா என பல மொழி சினிமா வட்டாரங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் நடிகர் சித்தார்த்தும் திலீப் குமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடைய புகைப்படத்தோடு பதிவு ஒன்றை இட்டிருந்தார். அதில் வந்து கமெண்ட் செய்த ஒருவர் திலீப் குமார் பார்க்க அக்‌ஷய்குமார் போல இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான சித்தார்த் “டேய் சாவடிச்சுடுவேன்.. ஓடிடு” என பதிவிட்டுள்ளார்.