புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (15:29 IST)

மணிரத்னம் படத்தில் கதாநாயகனாகிறாரா சித் ஸ்ரீராம்?

பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகர்களில் ஒருவராக இருக்கிறார்.

கடல் படத்தின் அடியே பாடல் மூலமாக கவனம் ஈர்த்தவர் பாடகர் சித் ஸ்ரீராம். அதன் பிறகு பல இசையமைப்பாளர்களோடு இணைந்து வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மணிரத்னம் தயாரித்த வானம் கொட்டட்டும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு மணிரத்னம் இயக்க உள்ள புதிய படத்தில் சித் ஸ்ரீராம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான வேலைகள் இப்போது தொடங்கியுள்ளன.