செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 30 டிசம்பர் 2019 (16:46 IST)

ஆப்ரிக்கா சிங்கத்தை அருகில் நின்று ஸ்னாப் செய்த மாளவிகா மோகன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.  ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 
தற்போது விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இற்கிடையில் தனக்கு பிடித்த வைல்ட் லைப்பிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.  அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் மசினகுடி, வயநாடு போன்ற மலையடிவாரா பகுதிகளில் பயணித்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது மாளவிகா ஆப்ரிக்கா காட்டில் வன விலங்குகளை பார்க்க அங்கு விசிட் அடித்து மரத்தில் இருக்கும் சிங்கம் ஒன்றை 20 நிமிடம் நின்று ரசித்துள்ளார். கூடவே அதனை தனது கேமராவில் புகைப்படமெடுத்த மாளவிகா மோகனன் அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு " கடந்த 2 ஆண்டுகளில் நான் வனவிலங்குகளில் மிகுந்த ஆர்வத்தையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டேன், மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு காடுகளுக்கும் இயற்கை வாழ்விடங்களில் அதிக விலங்குகளைப் பார்க்கவும், அவற்றைப் பற்றி மேலும் அறியவும் பயணங்களை மேற்கொண்டு வருகிறேன். இந்தியாவில் கபினி, மசினகுடி, வயநாடு போன்ற காடுகளுக்குச் சென்றதிலிருந்து, இப்போது ஆப்பிரிக்கா போன்ற வித்தியாசமான நிலப்பரப்புகளையும் சுற்றுச்சூழல் அமைப்பையும் எனது பட்டியலில் சேர்க்க முடிந்தது இது போன்ற ஒரு பரபரப்பான அனுபவம் என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

In the last 2 years I have developed a lot of interest and passion in wildlife, and have been making trips to various forests across the country to see more animals in their natural habitat and to learn more about them. From visiting forests like Kabini, Masinagudi, Wayanad, etc in India, to now be able to add a different kind of terrain and ecosystem like Africa to my list has been such a thrilling experience. With so much time being spent round wildlife, I’ve also increasingly been feeling the need to capture some of those moments. We were on a game drive in Ndutu a couple of days back and we saw this gorgeous lioness perched on a tree branch. We watched and observed her for a good 20 minutes and I also got the chance to take some lovely photographs of her