1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 ஜூன் 2022 (15:19 IST)

சிபிராஜின் ‘மாயோன்’ டிரைலர் ரிலீஸ்

mayoon
சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடித்த ‘மாயோன்’ திரைப்படம் வரும் ஜூன் 24ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது
 
இரண்டு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த ட்ரெய்லரில் திகில் மற்றும் மர்ம காட்சிகள் நிறைந்து உள்ளதால் இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
குறிப்பாக 5 ஆயிரம் வருடத்திற்கு முந்தைய ஒரு பழங்கால கோவிலில் நடக்கும் மர்மமான விஷயங்கள் குறித்து இந்த படம் ஆய்வு செய்து படமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிபிராஜூக்கு இந்த படம் அவருடைய திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது