1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (11:54 IST)

நான் வெளியில் வந்திடுவேனா...? அப்போ டைட்டில் வின்னர் இந்தம்மான்னு நெனச்சுட்டு இருக்கு போல..!

பிக்பாஸ் வீட்டில் நேற்றிலிருந்து ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களை பார்க்க அவர்களது குடும்ப உறவினர்கள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர். அந்தவகையில் நேற்று ஷிவானியின் அம்மா , பாலாஜியின் நண்பர் வந்திருந்தார். 
 
இதில் ஷிவானியை பார்த்து நாம் கேட்க வேண்டிய அத்தனை கேள்விகளையும் அவரது தாய் கேட்டு நம் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை இறக்கிவிட்டார். ஷிவானியின் தாய் ஆரியிடம் பேசியதும் அவருக்கு மரியாதை கொடுத்தது பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இதனால் ஆடியன்ஸ் பல பேருக்கு ஷிவானியின் அம்மாவை பிடித்துவிட்டது. 
 
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதலாவது ப்ரோமோ வீடியோவில் ரம்யாவின் அம்மா மற்றும் தம்பி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது சக போட்டியார்களிடம் பேசிய ரம்யாவின் தயார் ஆரியை கண்டித்தது யாருக்கும் பிடிக்கவில்லை. எல்லோரும் உங்க பொண்ண கூடவே கூட்டிட்டு போய்டுங்க என கமெண்ட் செய்துள்ளனர். மேலும், ரம்யாவின் தம்பி இந்த வாரம் நீ எவிட் ஆகி வெளியேறினால் அது உன்னுடைய தவறு இல்லை என கூறி காமெடி பண்ணிட்டார்.
 
தவளை தன் வாயால் கெடும்... ஆனால்,  அதுக்கு தவளை காரணம் இல்லைனு சொல்றது எப்படி சரியாகும். ரம்யா எப்போதும் ஆரியிடம்  மட்டும் தவறே செய்யாமல் இருந்தாலும் ஆக்ரோஷமா சண்டை போடுவதும் மற்றவர்கள் தவறுக்கு வாயை திறக்காமல்  இருப்பதால் தான் வெளியே வரப்போறாங்க . அப்புறம் ஏன் அவரது தம்பி எவிக்ஷனுக்கு ரம்யா காரணம் இல்லைனு சொல்லறாரு...?