வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (10:38 IST)

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன்! – கம்பேக் ஆகுமா?

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாக இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது கேஜிஎஃப் இயக்குனரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர் ஸ்ருதி ஹாசன். ஆனால் சமீப சில வருடங்களில் இவருக்கும் சொல்லிக் கொள்ளும்படியாக சிறந்த படங்கள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாளையொட்டி முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் கேஜிஎஃப் படம் மூலமாக இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் பிரசாத் நீல் அடுத்ததாக பிரபாஸை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார். சலார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் நீண்ட காலம் கழித்து ஸ்ருதிக்கு இந்த படம் கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.