1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (10:19 IST)

நம்பர் ஒன் ட்ரெண்டிங்... 4 மில்லியன் வியூ - வேற லெவல் சாதனை படைத்த வாத்தி கம்மிங்!

வெளியான ஒரே நாளில் பெரும் சாதனை படைத்த வாத்தி கம்மிங் வீடியோ பாடல்....!
 
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான நிலையில் வாத்தி கம்மிங் பாடல் வீடியோ நேற்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சியிலும் இணையதளங்களிலும் வெளியானது. 
 
இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் தற்போது பாடல் வெளியான 17 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. 46 வயதிலும் விஜய் டீனேஜ் பையன் போன்று கியூட்டாக நடனமாடியுள்ள இந்த வீடியோ விஜய் ரசிகர்களை ரசித்து ரசித்து கொண்டாட வைத்துள்ளது.