1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (21:16 IST)

ஸ்ருதிஹாசன் தங்கை கேரக்டரில் டிடி!

ஹாலிவுட்டில் பிரமாண்டமான அனிமேஷன் திரைப்படமாக உருவாகியுள்ள  ‘ஃப்ரோஷன் 2’ திரைப்படம் பல கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் நவம்பர் 22ஆம் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது
 
இந்த படத்தின் முக்கிய கேரக்டரான எல்சா என்ற கேரக்டருக்கு நடிகை ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எல்சாவின் தங்கை கேரக்டரான அன்னா என்ற கேரக்டருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி புகழ் டிடி என்ற திவ்யதர்ஷினி குரல் கொடுத்துள்ளார். இருவரும் ஒரு திரைப்படத்திற்கு குரல் கொடுத்துள்ளது இதுவே முதல்முறை
 
இந்த படத்தில் குரல் கொடுக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து டிடி கூறுகையில், ;டிஸ்னியில் இருந்து இப்படத்தில் வேலை செய்யக் கேட்ட போதே நான் உற்சாகத்தில் மிதந்தேன். எப்படி ஒரு வாய்ப்பு. சிறு வயது முதல் டிஸ்னியின் படங்கள் எனது ஃபேவரைட்.  அதிலும் ராஜகுமாரி கதைகள் என்னை முன்வைத்ததாக உணர்வேன். எல்லா இளவரசி கதையிலும் இளவரசன் வந்து மீட்டுப் போக இளவரசி காத்திருப்பாள் ஆனால் இந்தக்கதையில் அதெல்லாம் இல்லை. அவள் தனித்துவமானவள் அவளுக்கென லட்சியங்கள் இருக்கிறது. அவளுக்கு ஆசைகள், கடமைகள் இருக்கிறது இப்படியான படத்தில் பணிபுரிய யாருக்கு தான் பிடிக்காது. இப்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் பணிபுரிந்தது மேலும் மகிழ்வை தந்தது