திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (08:21 IST)

தந்தைக்கு போட்டியாக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் அமேசான் ப்ரைம் தளத்துக்காக நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளாராம்.

கமல்ஹாசன் போலவே அவரின் மகள் ஸ்ருதிஹாசனும் பன்முகத்திறமை வாய்ந்தவர். நடிப்பு, பாடல் மற்றும் இசை எனப் பலத்துறைகளில் கால்பதித்த அவர் இப்போது நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்க உள்ளாராம். இந்த நிகழ்ச்சி அமேசான் ப்ரைமுக்காக தெலுங்கில் உருவாக உள்ளதாம். ஸ்ருதியின் தந்தை கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.