1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 4 மே 2020 (09:00 IST)

சீரியல் நடிகை ஷிவானியின் சின்ன வயசு போட்டோவை கொஞ்சும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராமில் டான்ஸ் ஆடுவது , பாட்டு பாடுவது , ஒர்க் அவுட் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பள்ளி குழந்தையாக இருக்கும் தனது சிறுவயது போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு "நான் இன்னும் அப்படியே இருக்கிறேனா..? என கேட்டு, இது தான் தன்னுடைய ஃபேவரைட் சிறுவயது புகைப்படம் எனவும் கூறி பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Do i look the same ?