புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (08:31 IST)

புல்லட்டை ஓட்டத்தெரியாமல் ஓட்டி கீழே விழுந்த அஜித் பட நடிகை - வீடியோ

தமிழில் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த இவன் தந்திரம் கார்த்திக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதையடுத்து விக்ரம் வேதா, காற்றுவெளியிடை போன்ற பல படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று பிரபல நடிகையாக வளம் வரத்துவங்கினர்.

கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து பரவலான மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷ்ரத்தா. இந்த படம் அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்த அதன் மூலம் பல பெரிய படவாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அந்தவகையில் கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் புல்லட் ஓட்டி கீழே விழுந்த வீடியோவை வெளியிட்டு,  "இந்திய சினிமாவில் போல்டான பெண் என்றால் பைக் ஓட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி என கூறி  ராயல் என்ஃபீல்டு ஏன் இவ்ளோ வெயிட்டா இருக்கு என பதிவிட்டுள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த புல்லட்டில் இருந்து நான் கீழே விழுந்த நிலையில், என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை, புல்லட்டுக்கு எந்த சேதமும் ஆகவில்லையே என்று தான் அனைவரும் பார்த்தார்கள் என்று கூறியுள்ளார்.