"பிக்பாஸில் பங்கேற்க படுக்கைக்கு அழைத்தார்கள்" பிரபல தொகுப்பாளினி சொன்ன அதிர்ச்சி தகவல்!

Last Updated: வெள்ளி, 12 ஜூலை 2019 (13:15 IST)
தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை 2 சீசன்கள் நிறைவடைந்து தற்போது மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதே போல் தெலுங்கு சினிமாவிலும் வெகு விரைவில் மூன்றாவது சீசன் துவங்கவிருக்கின்றனர். 


 
தெலுங்கில் இந்தமுறை பிரபல நடிகரான நாகர்ஜுனா நிகழ்ச்சியை துவங்கவிருக்கிறார். இதற்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என பிரபல தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி கூறி தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதைப்பற்றி பேட்டி ஒன்றில் கூறிய அவர், பிக்பாஸ் குழுவிடம் எனக்கு அழைப்பு வந்தது. பின்னர் நான் கலந்துகொள்ளவதாக கூறியிருந்தேன். பின்னர் மறுபடியும் அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எனக்கு போன் செய்து "உங்களை தேர்வு செய்வதால் எனக்கு என்ன கிடைக்கும்" என ஒரு மார்கமாக கேட்டார்.


 
உடனே எனக்கு புரிந்துவிட்டது. அவர் தவறான எண்ணத்தில் தான் கேட்கிறார் என்று, அதனால் நான் பிக்பாஸ் வாய்ப்பை வேண்டாமென மறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் தொகுப்பாளினி  ஸ்வேதா ரெட்டி. இந்த விவகாரம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :