வனிதாவை விடாமல் வெளுத்து வாங்கும் தர்ஷன்!

Last Updated: வெள்ளி, 12 ஜூலை 2019 (12:25 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் வனிதாவுக்கு , தர்ஷனுக்கு சண்டை முட்டியுள்ளது. 


 
முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் கேம் விளையாடி கொண்டிருக்கும் போது சாக்ஷியுடன் தேவையில்லாமல் சண்டை இழுக்கும் வனிதாவை தர்ஷன் தட்டி கேட்கிறார். இதனால் கடுப்பான வனிதா தர்ஷன் பக்கம் திரும்பி சண்டையிடுகிறார். " தேவையில்லாமல் நீ எதுக்கு வர நான் உன்கிட்ட ஆர்கியூ பண்ணல என  கத்துகிறார். 
 
தற்போது இரண்டாவது ப்ரோமோவில் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களான மீரா மிதுன் , ஷெரின் , கவின் உள்ளிட்டோரிடம் " அவ கத்தினா நான் அடங்கி போய்டுவேன்னு நெனச்சுட்டு இருக்குறா..இதைத்தான் அவ எல்லார்கிட்டயும் செஞ்சுட்டு இருக்குறா என கூறுகிறார். உடனே தர்ஷனுக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் கவின் பேசுகிறார். 
 
பின்னர் கோவமாக இருக்கும் தர்ஷனின் மைண்ட்யை மாற்ற ஷெரின் அவருடன் ரொமான்டிக்கான சில வார்த்தைகளை பேசுகிறார்.  எது எப்படியோ வனிதாவை எல்லோரும் கழட்டிவிட்டனர். இனி அவரது உதார் செல்லுபடி ஆகாது.
 


இதில் மேலும் படிக்கவும் :