வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (12:03 IST)

சிவகார்த்திகேயனுடன் ஷிவாங்கி: ‘டான்’ பட புகைப்படங்கள் வைரல்!

சிவகார்த்திகேயனுடன் ஷிவாங்கி: ‘டான்’ பட புகைப்படங்கள் வைரல்!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கி இந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே எடுத்த செல்பி புகைப்படங்களை நடிகர் பாலசரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
 
சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், ஆர்ஜே விஜய் ஷிவாங்கி  மற்றும் பாலசரவணன் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன