1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (08:47 IST)

ஆர்ட்டிகிள் 15 ரீமேக்… முக்கியக் கதாபாத்திரத்தில் சிவாங்கி!

தமிழில் ரீமேக் ஆகும் ஆர்ட்டிகிள் 15 படத்தில் குக் வித் கோமாளி பட புகழ் சிவாங்கி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளார்.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான சிவாங்கி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.