செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 மார்ச் 2021 (18:48 IST)

ஷங்கரின் அடுத்த 2 படங்களில் இவர்தான் ஹீரோயின்

இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயரெடுத்துள்ளவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியாக்ன ஜெண்டில்மேன், ஜீன்ஸ், காதலன், முதல்வன், பாய்ஸ், இந்தியன்,எந்திரன் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

இந்தியன்2 படப்பிடிப்பின்போது எதிர்பாராத சில உயிரிழப்புகளால் இப்படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஷங்கர் தெலுங்கு சினிமா ஹிரோ ராம்சரணை வைத்து இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாலிவுட்டில் ரண்வீர் சிங்கை வைத்து ஒரு படம் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களிலும் கியாரே அத்வானி ஹீரோயின் எனத் தகவல் வெளியாகிறது.