ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 மார்ச் 2021 (16:02 IST)

வருமானவரி சோதனை; அதிமுக மீது துரைமுருகன் குற்றச்ச்சாட்டு..

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு செய்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

 தமிழகம் முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்

இதனையடுத்து அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு அவர்களும் உடனிருந்து பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் எ.வ.வேலு அவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளதாவது:

 வருமானவரிச் சோதனையில் அரசியல் நோக்கம் உள்ளது.ஸ்டாலின் தங்கியிருந்தபோது சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது. மத்திய அர்சை தோல்வி பயத்தின் காரணமாகவே அதிமுக தூண்டிவிட்டுள்ளது எனக் குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலடியாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி,

வருமான வரித்துறை சுதந்திரமான அமைப்ப்பு ; வரித்துறையினர்  தகவலின் அடிப்படையிலேயே சோதனையில் ஈடுபடுகின்றனர். இந்தச் சோதனையினால் கறுப்புப் பணம் வைத்துள்ளவர்களே கவலைப்பட வேண்டுமெனக்கூறியுள்ளார்.