செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (12:41 IST)

பெரியப்பா அனுபவத்தை தந்ததற்கு நன்றி! – கேஜிஎஃப் இயக்குனருக்கு சங்கர் பாராட்டு!

Shankar
சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த கேஜிஎஃப் 2 படத்தை பார்த்த இயக்குனர் சங்கர் கேஜிஎஃப் இயக்குனரை பாராட்டியுள்ளார்.

யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப். இதுபெரும் வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் சேப்டர் 2ம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. கடந்த ஒரு மாத காலமாக வெற்றிகரமாக ஓடி வரும் கேஜிஎஃப் உலக அளவில் 1000 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் அமேசான் ப்ரைமில் இந்த படம் ரெண்ட்டுக்கு வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்தை பார்த்த இயக்குனர் சங்கர் “கேஜிஎஃப் 2 பார்த்துவிட்டேன். கதை, திரைக்கதை, எடிட்டிங் எல்லாம் சிறப்பாக உள்ளது. யஷ் சிறப்பாக நடித்துள்ளார். பெரியப்பா அனுபவத்தை கொடுத்த பிரசாந்த் நீலுக்கு நன்றி. படக்குழுவினருக்கு பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.