1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 9 மே 2022 (18:30 IST)

பிரமாண்ட இயக்குநர் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி   நடிகை கீர்த்தி சுரேஷ், பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், விஷால், தனுஷ் ஆகிய முன்னணி  நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் சர்க்காரு வாரி பாட்டா. இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. செல்வராகவனுக்கு தங்கையான கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக் காயிதம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ராம் சரணின் 15 வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி  வரும் ஒரு புதிய படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்கின்றனர். கியாரா  அத்வானி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.