வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (20:40 IST)

கார்த்தியின் விருமன் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

viruman
கார்த்தி நடித்த விருமன்  என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்
 
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி ஜோடியாக நடித்துள்ள அதிதிஷங்கர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார் என்பதும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண், மைனா நந்தினி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவும், வெங்கட்ராஜா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.