ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (10:43 IST)

அதிமுகவால் அரசியல் ஆலோசகரின் தொடர்பை முறிக்கும் கமல்!!

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் கமல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல அரசியல் கட்சிகளின் அரசியல் ஆலோசகராகவும், வியூகங்களை வகுத்து கொடுப்பவராகவும் திகழ்ந்து வருபவர் பிரசாந்த் கிஷோர். பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர், பிரசாந்த் கிஷோரின் வியூகத்தால் தான் வெற்றி பெற்றார்கள் என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து சமீபத்தில் பிரசாந்த் கிஷோருடன் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கைகோர்த்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், கமல்ஹாசன், பிரசாந்த் கிஷோருடனான ஒப்பந்தத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான காரணமாக, அதிமுகவோடு பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தியதால் தான் கமல் தரப்பினருக்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கள ஆய்வுக்காக ஐ பேக் நிறுவனம் அனுப்பும் ஆட்கள் எல்லாம் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களால் தமிழக மக்களின் மனங்களை கணிக்க முடியாது என்பதையும் காரணமாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.