1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (17:26 IST)

ஷங்கர்- ராம்சரண் படத்தில் பிரமாண்ட சண்டை காட்சி.....ரசிகர்கள் பிரமிப்பு

''விஜய்66'' பட தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில்,ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்  நடிப்பில் உருவாகி வரும் படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது ராம்சரண் –கியாரா அத்வானி நடிப்பில் ஆர்.சி15 படத்தை இயக்கி வருகிறார்.

வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்திற்கு  ‘அதிகாரி’ என்று தலைப்பு வைக்க பரிசீலனை செய்துவருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இப்பட்த்தின் சண்டைக்காட்சிக்காக ஒரு மாதம் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், விக்ரம் பட புகழ் மெய்யறிவுதான் இப்படத்திற்கு சண்டைக்காட்சி அமைக்கவுள்ளார்கள் என்றும் இதற்காக ரூ.6 கோடி செலவு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இதனால், ரசிகர்கள் ஆச்சர்யத்தின் மூழ்கியுள்ளனர்.