திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (09:35 IST)

விஜய் சேதுபதிக்கு தேசிய விருதே கொடுக்கலாம்… மாமனிதன் பார்த்து இயக்குனர் ஷங்கர் ட்வீட்!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக சொல்லப்பட்டது.

இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் வாங்கியுள்ளார். சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் மாற்றப்பட்டது. கடைசியாக இன்று ‘மாமனிதன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. நேற்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் படம் பார்த்த இயக்குனர் ஷங்கர் “நல்ல படம் பார்த்த திருப்தியை மாமனிதன் தருகிறது. விஜய் சேதுபதியின் அபாரமான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது.  இசைஞானி மற்றும் யுவனின் இசை படத்தின் ஆன்மாவோடு கலந்துள்ளது” எனக் கூறி பாராட்டியுள்ளார்.