1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (19:17 IST)

விஜய்-விக்ரம் படத்தை இயக்கும் ஷங்கர்! இந்தியன் 2' டிராப்பா?

கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  'இந்தியன் 2' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தை டிராப் செய்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த படத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தொடர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
 
ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள திரைப்படம் 'இந்தியன் 2' படம் அல்ல என்றும், அதற்கு பதிலாக புதிய திரைப்படம் என்றும், இந்த படத்தில் தளபதி விஜய்யும், சீயான் விக்ரமும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாகவிருப்பதாக கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செய்தி வெளிவந்தது. அதே கதைதான் தற்போது உருவாகவிருப்பதாகவும், ஆனால் இன்றைய நிலைக்கேற்ப திரைக்கதையில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது