திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (09:59 IST)

இந்தியன் 3க்கு என்ன பண்ணலாம்…. சமீபத்தில் நடந்த கமல் & ஷங்கர் சந்திப்பு!

கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.

மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது.

அதனால் இந்தியன் 2 வில் செய்த பிழைகளை சரிசெய்து இந்தியன் 3 படத்தை மெருகேற்றி எப்படியாவது அந்த படத்தை ரசிகர்களுக்கு பிடிக்கவைத்துவிட வேண்டும் என கமலும், ஷங்கரும் முடிவு செய்துள்ளார்களாம். அது சம்மந்தமான சமீபத்தில் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.