வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (16:37 IST)

நூதனமா ஹேக் பண்ண ட்ரை பண்றாங்க… நடிகை ஷாலு ஷம்முவின் அலர்ட் பதிவு!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்ய முயன்ற சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து  தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதையடுத்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிந்த ஒருவரின் அக்கவுண்ட்டில் இருந்து வந்த மர்மமான லிங்க் குறித்தும் அதை திறந்தால் எப்படி உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் என்பது பற்றியும் பகிர்ந்துள்ளார். மேலும் ”அதுபோல ஏதேனும் லிங்க் வந்தால் அதை ஓபன் செய்யவேண்டாம் என்றும் அப்படி செய்தால் உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படும்” என்றும் கூறியுள்ளார்.