திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (16:47 IST)

ராவணனாக நடிக்க ஆளே கிடைக்கலையா?... சைப் அலிகான் நடிப்பை விமர்சித்த சக்திமான் முகேஷ் கண்ணா!

பலத்த எதிர்பார்ப்புகளும், அதே நேரத்தில் கேலிகளை எதிர்கொண்டும் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆனது ஆதிபுருஷ் திரைப்படம். வெளியானது முதல் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வட இந்தியாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது.

ஆனாலும் படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருப்பதாக படக்குழுவின் சார்பாக தினமும் செய்தி வெளியிடப்படுகிறது. 3 நாளில் 340 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் சக்திமான் சீரியல் மூலம் பிரபலமான முகேஷ் கண்ணா படத்தில் ராவணனாக நடித்த சைப் அலிகான் நடிப்பை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில் “ராவணன் கொடூரமான ஒருவராக இருக்கலாம். ஆனால் அவன் சிறந்த கல்வியாளன். எப்படி ராவணன் கதாபாத்திரத்தை ஒருவர் வடிவமைக்க முடியும் என அதிர்ச்சியாக இருக்கிறது. படம் தொடங்கப்படும் போதே ராவணன் கதாபாத்திரத்தை நான் நகைச்சுவையாக மாற்றுவேன் என சைஃப் சொன்னார். அப்போதே எங்கள் காவியத்தின் கதாபாத்திரத்தை மாற்ற நீ யார் என நினைத்தேன். ராவணனாக நடிக்க சைஃப் அலிகானை விட வேறு சிறந்த நடிகரை இயக்குனரால் கண்டுபிடிக்க முடியவில்லையா?” என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார்.