கவினை காதலிப்பது போன்று நடிக்குறா சாக்ஷி - மதுமிதா பளீச்!

Last Updated: புதன், 10 ஜூலை 2019 (16:06 IST)
இன்றைய நாளுக்கான முன்றாவது ப்ரோமோ வீடியோவில் "சாக்ஷி கைவினை காதலிப்பது போன்று நடிக்கிறாள். ஆனால், அது கவினுக்கே தெரியாது" என மதுமிதா கூறுகிறார். 


 
நேற்றைய கொலைகாரன் டாஸ்கில் இறந்துபோன சாக்ஷியை மற்ற போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அடுத்ததாக மதுமிதா சாக்ஷியை பற்றிய தன் ஆதங்கத்தை புட்டு புட்டு வைக்கிறார். அந்தவகையில் மதுமிதா கூறியதாவது, இந்த வீட்டுல இருக்குற எல்லாரையும் நான் இங்கு வந்து தான் பார்த்தேன்.  ஆனால் வெளியிலேயே எனக்கு தெரிஞ்சவ சாக்ஷி என்ன இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு சாட்சி சொல்லாமல் போனதுதான் மனதிற்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. 
 
வெளில நல்லா நடிப்பா, வீட்டிற்குள் அதை விட அருமையாக நடிப்பா, கவினை காதலிக்கிற மாதிரி நடிச்சுட்டு இருக்குறா...ஆனால் அது நம்ம கவினுக்கே தெரியாது அது தான் உண்மை என சாக்ஷியின் அதனை விஷயங்களையும் புட்டு புட்டு வைத்துவிட்டார் மதுமிதா. 
 


இதில் மேலும் படிக்கவும் :