"வனிதாவுக்கு பதில் மோகன் தான் அடுத்த எலிமினேஷன்" - உளறிய சாண்டி!

Last Updated: புதன், 10 ஜூலை 2019 (10:44 IST)
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் வனிதா, சரவணன், மதுமிதா, மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் வனிதா தான் வெளியேறவேண்டும் என பெரும்பாலானோர் தெரிவித்தனர். 


 
ஆனால் வனிதா வெளியேறிவிட்டால் கன்டென்ட் இல்லாமல் நிகழ்ச்சி சுவாரஸ்யத்தை இழந்துவிடும் என்பதால் வனிதா தக்கவைக்க படுவார். எனவே இதில் சரவணன் அல்லது மோகன் வைத்யா வெளியேற வாய்ப்பு இருக்கிறது. காரணம் சரவணன் தனது மகனை பிரிந்திருக்க முடியவில்லை என்னை விட்டுவிடுங்க என கமலிடம் கேட்டார். மற்றும் மோகன் வைத்யால் பிக்பாஸிற்கு பெரிய பலன் ஏதுமில்லை.  ஆதலால் இந்த இருவரில் யாரேனும் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  சாண்டி ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். 


 
அதாவது நேற்றைய டாஸ்கில் மோகன் வைத்யா கொலை செய்யபட்ட போது சாண்டி வழக்கம் போல கலாய்த்துக்கொண்டிருந்தார். அப்போது "அவரை 4 நாள் விட்டு இருந்தால் அவரே போய் இருப்பாரே ‘ என்று கூறி கலாய்த்தார் சாண்டி. சாண்டி இதனை விளையாட்டாக சொன்னாரோ அல்லது சீரியசாக சொன்னாரோ. இந்த வாரம் வெளியேற போவது மோகன் வைத்யா தான் என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :