1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 19 நவம்பர் 2022 (11:15 IST)

தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இலவசம்: அதிரடி அறிவிப்பு!

taj mahal
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு இன்று ஒருநாள் மட்டும் நுழைவு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலுக்கு தினந்தோறும் இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் இந்தியர்களுக்கு மற்றும் வெளிநாட்டினருக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் தாஜ்மகாலுக்கு நுழைய அனுமதி இலவசம் என இந்திய தொல்லியல் துறை செய்தி வெளியிட்டுள்ளது 
 
இதனை அடுத்து இன்று ஒருநாள் பொதுமக்கள் நுழைவு கட்டணம் இன்றி தாஜ்மஹாலை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தாஜ்மகாலுக்கு நுழைவு கட்டணம் இந்தியர்களுக்கு 45 ரூபாய் என்றும் வெளிநாட்டினருக்கு 1,050 ரூபாய் என்றும் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran