1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (14:51 IST)

என் பட ரிலீஸ்களை மம்மூட்டி தடுத்தாரா?- ஷகீலா கூறிய தகவல்!

ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் பி கிரேட் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்து விரட்டப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.

அதன் பின்னர் அவருக்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சில தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். கவர்ச்சி நாயகியாக அறியப்பட்டு பல லட்சங்கள் சம்பாதித்தாலும், அதையெல்லாம் உறவினர்களிடம் நண்பர்களிடமும் பறிகொடுத்துவிட்டு இப்போது சாதாரண வாழ்க்கையைதான் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் சில  சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில் இப்போது மலையாள சினிமாவில் தான் ஓரங்கட்டப்பட்டது குறித்து பேசியுள்ள ஷகீலா “எனது 23 படங்களுக்கு சென்சார் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர். என் படங்களை ரிலீஸ் செய்ய விடாமல் மம்மூட்டி தடுத்ததாக கேள்விபட்டேன். அவர்களின் கோபத்திலும் நியாயம் உள்ளது. அவர்கள் கோடிகளில் படம் எடுக்கிறார்கள். என் படங்கள் லட்சத்தில் எடுக்கப்பட்டு, அந்த படங்களை தோல்வி அடையச் செய்தால் அவர்களுக்கு கோபம் வருவது இயல்புதானே” எனக் கூறியுள்ளார்.